மகாராஜா அக்ரசன் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      திருவள்ளூர்
G pundi

கும்மிடிப்பூண்டியில் உள்ள மகாராஜா அக்ரசன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

 மகாராஜா அக்ரசன் மெட்ரிக் பள்ளியில் கும்மிடிப்பூண்டி தொழில்ந கர ரோட்டரி சங்கம் இணைந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மகாராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தினர்.14 வயதிற்குட்பட்டோர் மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டிகளை கும்மிடிப்பூண்டி தொழில் நகர ரோட்டரி சங்க நிர்வாகி குமார் துவக்கி வைத்தார்,

பாராட்டு சான்றிதழ்


போட்டிகளுக்கு மகாராஜா அக்ரசன்மெ ட்ரிக் நிர்வாகிகள் சுனில் ஷெரப், சுஷில் ஷெரப், சுப்பையா முன்னிலை வகித்தார்.27 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 475 மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக்ப ள்ளி முதல் பரிசையும், மகாராஜா அக்ரசன் மெட்ரிக் பள்ளி இரண்டாம்பரிசையும் வென்றது. அதே போல 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் பொன்னேரி ஆதர்ஷ் மெட்ரிக்ப ள்ளி முதல் பரிசையும், ஆத்துப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம்ப ரிசையும் வென்றது.தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள்ரா ஜகோபால், ரவிக்குமார், கவாஸ்கர், செல்வம், தங்கசாமி முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ரோட்டரி சங்க தலைவர் ராஜன், என்.ஆர்.கோமளவல்லி கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து