முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்பனார்கோவில் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 கலெக்டர் ஆய்வு

செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பரசலூர்-சாத்தங்குடி சாலை மேம்பாட்டுப் பணிகளையும், பிரதம மந்திரி நினைவு குடியிருப்புத் திட்டத்தின்(2016-2017) கீழ்ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், பசுமை வீடுகள் திட்டத்தின்(2016-2017) கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், முடிகண்டநல்லூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் உணவுப் பாதுகாப்புக் கிடங்கின் கட்டுமானப் பணிகளையும், காளஹஸ்திநாதபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையத்தின்; கட்டுமானப் பணிகளையும், மடப்புரம் ஊராட்சியில் தாய் திட்டத்தின் (2016-2017) கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகளையும், காலமநல்லூர் கிராமத்தில் நடைபெற்று வரும் அம்மனாற்று பாலம் சீரமைப்புப் பணிகளையும், பிள்ளைப் பெருமாநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திரளான மரக்கன்றுகள் நடும் பணிகளையும், திருக்கடையூர் ஊராட்சியில் தாய் திட்டத்தின் (2016-2017) கீழ் ரூ.5.78 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகளையும், கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருண், தியாகராஜன், செயற்பொறியாளர் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து