முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக யூசப் பதான் 5 மாதங்கள் இடைநீக்கம் - பி.சி.சி.ஐ நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டிபிடிக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதானை 5 மாதம் சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒருபோட்டியில் மட்டும்...

கிரிக்கெட் வீரர யூசுப் பதான் கடந்த ஆண்டு போட்டியில் டர்புடலினின் தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதாக  சோதனையில் தெரியவந்தது.  இதை தொடர்ந்து சமீபத்திய  ரஞ்சி டிராபியில் விளையாட யூசுப் பதானை பரோடா மாநில  கிரிக்கெட் சங்கம்  தேர்வு செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சமீபத்தில் கேட்டு கொண்டது. பரோடாவுக்காக பதான் ஒரே ஒருபோட்டியில் மட்டும் விளையாடி இருந்தார்.

அனுமதி பெறவில்லை...

டெர்பியூட்டலின் உள்ள ப்ரோசெட் என்ற மருந்து ஒன்றை உட்கொண்டது. டெர்பியூட்டலின் ஒரு தடை செய்யப்பட்ட பொருளாக இருந்தாலும், முன் அனுமதி பெற்றிருந்தால் வீரர் அதை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர், ஆனால் பதான் அணி டாக்டரிடம் முன் அனுமதி பெறவில்லை. கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்  தடைசெய்யப்பட்ட ஒரு  பொருளை கவனமின்றி உட்கொண்டுள்ளார். இது பொதுவாக இருமல் மருந்தில் காணப்படும். இது குறித்த பதானின்  விளக்கத்தை ஏற்று  பிசிசிஐ திருப்தி அடைந்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2-வது வீரர்...

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் எந்தவொரு கிரிக்கெட்டையும் பதான் விளையாடவில்லை. பதான் இப்போது  மேற்கொண்ட ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இந்த 5 மாத தடைக்காலம் ஆகஸ்ட் 15, 2017 முதல்  ஜனவரி 14 , 2018 நள்ளிரவு முடிவடையும். 2012 ஐபிஎல் போட்டியில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாக  டெல்லி  பந்து வீச்சாளர் பிரதீப் சங்வான் 18 மாத தடை விதிக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து