சிரியாவில் நடக்கும் வன்முறைகளை தடுக்க ரஷ்யா, ஈரானுக்கு துருக்கி வலியுறுத்தல்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      உலகம்
sriya 2018 01 10

கெய்ரோ: ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சிரியாவில் நடக்கும் வன்முறை தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அனடோலு செய்தி நிறுவனத்திடன் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவுலுட் கேவுசோகுலு நேற்று கூறியபோது, "ஈரானும், ரஷ்யாவும் அவர்களது கடமைகளை புரிவதற்கு நேரம் வந்துவிட்டது. சிரியா அரசு இட்லிப் மாகாணத்தில் நடத்தும் வான்வழித் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிரியாவில் நடக்கும் வன்முறைகள் இந்த இரு நாடுகளின் உதவி இல்லாமல் ஏற்படாது''என்று கூறியுள்ளார்.

திங்கட்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 23 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலை கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரியா அரசு நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் சிரியா அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கிறர்கள். இதுவரை சிரியாவில் நடந்த தாக்குதல்களுக்கு 3,40,000 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து