முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கனமழை, நிலச்சரிவுக்கு 13 பேர் பலி

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் பெய்த கனமழை, நிலச்சரிவுக்கு 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், "கலிபோர்னியா மாகாணத்தில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது”சாண்டா பார்பராவின் கிழக்குப் பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கனமழை காரணமாக இப்பகுதியில் உலகப் போர் நடைபெற்ற பகுதிகள் போல் உள்ளது” என்றார்.

போக்குவரத்து கடும் பாதிப்பு
வெள்ளம் காரணமாக கலிபோர்னியாவின் கிழக்குப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய ரக வாகனங்கள் மலை அடிவரங்களில் சேதப்பட்டு கிடப்பதாகவும், சுமார் 30,00 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலிப்போர்னியா மாகாண அரசு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அம்மாகாண அரசு பெரும் இழப்பை சந்தித்தது. இந்த நிலையில் மழையினால் மீண்டும் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து