பாட்னா அருகே பயணிகள் ரயிலில் தீ விபத்து: 4 பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசம்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      இந்தியா
train

பாட்னா: பிகார் மாநிலம் பாட்னா அருகே, ரயில்வே யார்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. இதில் 4 பெட்டிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

பாட்னா-மொகாமா பயணிகள் ரயில் நேற்று இரவு மொகாமா ரயில்நிலைத்திற்கு வந்தது. அதன்பின்னர், அங்கு பயணிகளை இறக்கி விட்டு சுத்தம் செய்வதற்காக யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், அந்த ரயிலின் பெட்டிகளில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடிய போதும், எஞ்சினுடன் நான்கு பெட்டிகளும் தீயில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துவிட்டன.


பயணிகள் யாரும் இல்லாதால் இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதுவும் நிகழவில்லை. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு ரயில் தடம் புரண்டதில் விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து