முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2018ல் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி நடப்பு ஆண்டில் 7.3% அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. 2018-ம் ஆண்டின் உலக பொருளாதார முன்னேற்றம் குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தில் நடப்பு ஆண்டில் 7.3% உயரும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சதவிகிதம் 7.5 ஆக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.  பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 5.7% ஆக சரிந்தது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். ஆனால் இரண்டாவது காலாண்டில் 6.7% ஆக உயர்ந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி 7.3% உயரும் என கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து