முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமானவரி உச்சவரம்பு உயருமா?

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் தாக்கலாகும்போது நடுத்தர மக்களின் எதிர்பார்பாக இருப்பது, இந்தாண்டாவது வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்பதே ஆகும். கடந்த ஆண்டு வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு தற்போது ரூ.2.5 லட்சமாகவே உள்ளது. இந்நிலையில் 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் வருமான வரி உச்சவரம்பு ரூ.4 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நிதிநிலை அறிக்கைத் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவும், பொருட்கள் விலையேற்றம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வருமான வரி உச்சவரம்பை ரூ 5.லட்சம் வரை படிப்படியாக உயர்த்தலாம் என்றும், உடனடியாக ரூ3.லட்சம் வரை உயர்த்தி அறிவிப்பு வெளியிடலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து