முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை மாவட்ட ஆட்சியரகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்: கலெக்டர் கந்தசாமி வெளியிட்டார்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் 2018ஆம் ஆண்டில் இறுதிவாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று வெளியிட்டார். தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டார். அதனை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பெற்றுக் கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.ஜானகி மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 66 ஆயிரத்து 996, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 95 ஆயிரத்து 784, திருநங்கைகள் 63 பேர் என மொத்தம் 19 லட்சத்து 62 ஆயிரத்து 843 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியல் பொது மக்களின் பார்வைக்காக சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர், விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் பெயர் முகவரி உள்ளிட்ட திருத்தங்களை இம்மாதம் இறுதிவரை செய்து கொள்ளலாம் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து