கோலாரம் பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 160 பயனாளிகளுக்கு ரூ.26.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      நாமக்கல்
3

 

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் உள்வட்டத்திற்குட்பட்ட கோலாரம், செருக்கலை மற்றும் இராமதேவம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அவர்களின் மனுநீதி நாள் முகாம் கோலாரம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நேற்று (10.01.2018) நடைபெற்றது. இம்மனுநீதி நாள் முகாமிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார

நலத்திட்ட உதவிகள்

இம்மனுநீதி நாள் முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 144 பயனாளிகளுக்கு ரூ.15,30,000 மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, வாரிசு சான்று, பட்டா மாறுதல், நத்தம் தோராய பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை துறையின் சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.76,300 மானிய நிதிஉதவியுடன் ரூ.2,05,958 மின்கலத்தெளிப்பான், ரொட்டோவேட்டர், சோலார் பவர் லைட் டிராப் உள்ளிட்ட வேளாண் கருவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,60,240 மதிப்பிலான சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான மானியம், விதைகள் மற்றும் பழக்கன்றுகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1500 வீதம் ரூ.54,000 மதிப்பீட்டில் மனவளர்ச்சி குன்றியோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவி பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.2.40 இலட்சம் வீதம் ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகள் என இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.26,70,198 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

 

கலந்து கொண்டோர்

 

இம்மனுநீதி நாள் முகாமில் திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். இம்மனுநீதி நாள் முகாமில் சேலம்-நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் (ஆவின்) ஆர்.சின்னுசாமி வாழ்த்துரை வழங்கினார். தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செல்வி.உ.பர்ஹத் பேகம், மாவட்ட சமூகநல அலுவலர் டாக்டர்.இரா.அன்பு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, உட்பட அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பரமத்திவேலூர் வருவாய் வட்டாட்சியர் இரா.ருக்குமணி நன்றியுரையாற்றினார்.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து