முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் 17.53 லட்சம் வாக்காளர்கள்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 17லட்சத்து 53 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தப் பணிகள் கடந்த மாதம் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு திருத்தங்களுக்காக  47 ஆயிரத்து 257 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 44 ஆயிரத்து 754 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பழனி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 777 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 950பெண் வாக்காளர்களும், 30 இதரர் என மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 757 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 94 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 40 ஆயிரத்து 340பெண் வாக்காளர்களும், 15 இதரர் என மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 449 வாக்காளர்கள் உள்ளனர்.
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 648 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 883 பெண் வாக்காளர்களும், 5 இதரர் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்.
நத்தம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 108 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 77பெண் வாக்காளர்களும், 44 இதரர் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 829 வாக்காளர்கள் உள்ளனர்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 328 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 30 ஆயிரத்து 384பெண் வாக்காளர்களும், 43 இதரர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 735 வாக்காளர்கள் உள்ளனர்.
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 254 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 953 பெண் வாக்காளர்களும், 5 இதரர் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 312 வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்தமுள்ள 7 சட்டமன்ற தொகுதியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 163 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 92 ஆயிரத்து 131 பெண் வாக்காளர்களும், 150 இதரர் என மொத்தம் 17 லட்சத்து 53 ஆயிரத்து 444 வாக்காளர்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து