முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருவதை தேனி கலெக்டர் வெங்கடாசலம் ஆய்வு

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

 தேனி.- தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி நியாய விலைக்கடையில் தமிழர் ாளாம் பொங்கல் ாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருவதை   மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவிக்கையில்,
தமிழக அரசு தமிழர் ாளாம் பொங்கல் ாளை ஏழை, எளிய, சாமானிய மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில், விலையில்லா அரிசி பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக்கரும்புத்துண்டு-1, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம் மற்றும் ஏலக்காய் 5 கிராம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம் ஆகிய 5 வட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற 401 முழு நேர நியாய விலைக்கடைகள், 91 பகுதி நேர நியாய விலைக்கடைகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் நடத்ப்பட்டு வருகின்ற 21 முழு நேர நியாய விலைக்கடைகள் மூலம் 3,80,202 குடும்ப அட்டைதாரர்களுக்கு  தலா ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வீதம் 3,80,202 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையும், 7,604 கிலோ முந்திரியும், 7,604 கிலோ உலர் திராட்சையும், 1,901 கிலோ ஏலக்காயும், 3,80,202 கரும்புத்துண்டுகளும் ஓதுக்கீடு செய்யப்பட்டு (13.01.2018) வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் தேனி வட்டத்தில் 54,949 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு வேட்டி, ஒரு சேலை வீதம் 1,09,898 வேட்டி, சேலைகளும், பெரியகுளம் வட்டத்தில் 63,841 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,27,682 வேட்டி, சேலைகளும், ஆண்டிபட்டி வட்டத்தில் 69,745 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,39,490 வேட்டி, சேலைகளும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 56,895 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,13,790 வேட்டி, சேலைகளும், உத்தமபாளையம் வட்டத்தில் 1,29,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,58,874 வேட்டி, சேலைகளும் என மொத்தம் 3,74,867 குடும்ப அட்டைதாரர்களுக்கு 7,49,734 வேட்டிகள், சேலைகள் வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் தங்குதடையின்றி முறையாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறா என்பதனை அனைத்து தொடர்புடைய அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
 ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்  செ.பொன்னம்மாள்   மாவட்ட வழங்கல் அலுவலர் தி.ரசிகலா   மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்   வட்டாட்சியர் ஷேக்அயூப்கான்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து