அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      தமிழகம்
udhaya kumar 2017 11 15

சென்னை : அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, அரக்கோணம் நகரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்க அரசு முன் வருமா? என்று கேட்டார்.
இயலாமல் இருந்தது...

அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி். உதயகுமார் பதில் அளிக்கையில், அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களை இணைத்து அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்க குறைந்த அளவு 1000 சதுர கிலோ மீட்டர் ஆட்சி எல்லை பரப்பு தேவைப்படுவதாலும், அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களின் பரப்பளவு 843.38 சதுர கிலோ மீட்டர் மட்டும் இருப்பதாலும், அரக்கோணம் நகரத்தை தலைமையிடமாக புதிய வருவாய் கோட்டம் அமைக்க இயலாமல் இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்ட திட்டங்களை அறிவித்து வருகிறார்.

உருவாக்க நடவடிக்கை...

வேலூரில் நடந்த விழாவில் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கூடுதல் பகுதிகளை சேர்த்து புதிய வட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் உத்தரவுப்படி புதிய கோட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து