முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 தொடரில் பங்கேற்க ஜூன் மாத இறுதியில் அயர்லாந்து செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாத இறுதியில் இரண்டு போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து செல்வதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

2 டி-20 போட்டிகளில்...

இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதற்கு முன்னதாக ஜூன் மாத இறுதில் அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இரண்டு டி-20 போட்டிகளின் விளையாட உள்ளது. முதல் போட்டி ஜூன் 27-ம் தேதியும், இரண்டாவது போட்டி ஜூன் 29-ம் தேதியும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதன்பின் அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

11 வருடங்களுக்கு முன்...

கடைசியாக கடந்த 2007-ம் ஆண்டு அயர்லாந்து சென்ற இந்திய அணி ஒரே ஒருநாள் போட்டியில் விளையாடியது. அதில் இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் இதற்கு முன் ஒரு முறை டி20 போட்டியில் விளையாடியுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து