முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச பனிச்சறுக்கு போட்டி: இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீராங்கனை அன்சால் தாகூர் வெண்கலம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.

முதல் பதக்கம்...

சர்வதேச பனிச்சறுக்கு ஃபெடரேசன் சார்பில் 'அல்பைன் எட்ஜர் 3200' கோப்பைக்கான போட்டி நேற்று துருக்கியில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா சார்பில் மனாலியைச் சேர்ந்த வீராங்கனை அன்சால் தாகூர் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். சர்வதேச அளவில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். இந்த வெற்றி எதிர்பாராத ஒன்று என அன்சால் டுவிட் செய்துள்ளார். அவரின் வெற்றிக்கு பலர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் பாராட்டு...

இந்நிலையில், அன்சாலின் சாதனைக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார். 'துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் வெண்கலம் வென்ற அன்சால் தாகூருக்கு எனது வாழ்த்துக்கள். சர்வதேச பனிச்சறுக்கில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது' என ராஜ்யவர்தன் சிங் ட்விட் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டரில், 'சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் பதக்கம் வென்ற அன்சாலுக்கு பாராட்டுக்கள். நாட்டில் உள்ள அனைவரும் அன்சாலின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அவர் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார். மேலும் அவர் வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்' என கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து