முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் பத்திர ஊழல் விவகாரம்: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கைகலப்பு

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு, கடன் பத்திர ஊழல் விவகாரம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை மத்திய ரிசர்வ் வங்கி கடன் பத்திரங்களை வெளியிட்டதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய ரிசர்வ் வங்கியில் கவர்னராக இருந்தவரின் மருமகன் 72 மில்லியன் டாலர் அளவுக்கு லாபம் அடைந்ததாகவும் அரசுக்கு 55 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுபற்றி விசாரணை நடத்திய குழு குற்றம்சாட்டியது. ரிசர்வ் வங்கியில் இருந்தே பத்திரங்கள் தொடர்பாக தகவல்கள் கசிய விடப்பட்டதாகவும் விசாரணைக் குழு கூறியது.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேயின் நம்பிக்கைக்குரியவர். இதுதொடர்பாக விக்கிரமசிங்கே மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அவர்களை ஆளும் கட்சி எம்.பி.க்கள் கண்டித்தனர். வாய் தகராறு முற்றி எம்.பிக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து