தூக்கமின்மையால் அமெரிக்காவில் ஆண்டுக்கு 3,500 குழந்தைகள் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      உலகம்
sleep-baby 2018 01 11

வாஷிங்டன், அமெரிக்காவில் குழந்தைகள் தூக்கமின்மையால் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது. அங்கு ஆண்டுதோறும் தூக்கமின்மையால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3,500 என கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் திடீர் நோய்பாதிப்பு இறப்பு அறிகுறி (SIDS), தற்செயல் மூச்சுத்திணறலினால் குழந்தைகள் இறப்பதும் அடக்கம் என்கிறது ஒரு புதிய ஆய்வு அறிக்கை.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், 1990களில் அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட பாதுகாப்பான தூக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தினால் தூக்கமின்மையினால் ஏற்படும் இறப்புகள் சற்றே சரிவைக் கண்டன. ஆனால் 90களின் கடைசியில் அந்த சரிவு மந்தமாகி குழந்தைகளுக்கான ஆபத்து மீண்டும் தொடர்கிறது.

"துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்டில் தூக்கக் கலப்பு இறப்புகளால் பல குழந்தைகளை இழந்துள்ளோம். அது தடுக்கப்பட வேண்டும்" என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் பிரெண்டா பிட்ஸ்ஜெரால்ட் கூறியதாக சின்குவா மேற்கோளிட்டு தெரிவித்துள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 201-5ல் மேற்கொண்ட கர்ப்பகால அபாய மதிப்பீட்டுக் கண்காணிப்பு ஆய்வறிக்கையின்படி தாய்மார்கள் உறங்கும் நிலையே பாதுகாப்பற்றதாக இருப்பதாக கண்டறியப்பட்டது. இத்தகைய தாய்மார்கள் எந்தப் படுக்கையையும் பகிர்ந்துகொள்வது, மென்மையான படுக்கை பயன்படுத்துவது போன்றவை இதற்கான காரணங்கள் எனக் கூறப்படுகிறது.

பாதுகாப்பற்ற தூக்கம் என்பது, குழந்தை தந்தையிடத்திலோ அல்லது தாயிடத்திலோ அல்லது அவர்களது வயிற்றுப்பகுதியை ஒட்டி உறங்குவதைக் குறிக்கிறது. மென்மையான படுக்கைகளில் தலையணைகள், போர்வைகள், மரத் தொட்டில்கள், அடைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் தூங்கும் நிலைப்பாடுகள் ஆகியவை அடங்கும்.

இந்த ஆய்வில் ஐந்து தாய்மார்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் குழந்தைகளை பக்கத்திலோ அல்லது வயிற்றை ஒட்டியோ படுக்கவைத்துக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.  பாதிக்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளோடு படுக்கையை பகிர்ந்துகொள்வதும், 5க்கு 2 தாய்மார்கள் 38.5 சதவீதம் குழந்தைகள் படுக்கும் இடத்தில் மட்டும்மென்மையான படுக்கையை அமைத்துக்கொள்வதாகவும் தெரிகிறது.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து