சொகுசு கார் வழக்கு: கேரள நடிகருக்கு முன்ஜாமீன்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      சினிமா
suresh gopi 2016 10 19

திருவனந்தபுரம் : சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் நடிகரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபிக்கு கேரள ஐகோர்ட் முன்ஜாமீன் அளித்துள்ளது. அதேவேளையில், அனைத்து சனிக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல லட்ச ரூபாய் மதிப்புடைய இரண்டு சொகுசு கார்களை வாங்கிய சுரேஷ் கோபி, அதிகப்படியான வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் வாகனப் பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு திருவனந்தபுரம் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் சுரேஷ் கோபி மனு தாக்கல் செய்தார்.

என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல; புதுச்சேரியில் எனக்குச் சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன; எனவே, அந்த முகவரியை ஆவணமாகச் சமர்ப்பித்து வாகனப் பதிவு செய்துள்ளேன் என்று அந்த மனுவில் சுரேஷ் கோபி தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், அந்த மனு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதைப் பரிசீலித்த நீதிபதி, சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன் அளிப்பதாக உத்தரவிட்டார். மேலும் ரூ. ஒரு லட்சம் சொந்தப் பிணையில் அவரை விடுவிப்பதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து