முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம்,மண்டபம் பகுதிகளில் 24,800 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் விநியோகம்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-: தமிழக அரசு வழங்கிய வேட்டி,சேலை உள்பட இதர பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு பொருள்கள் ராமேசுவரம்,மண்டபம் ஆகிய பகுதிகளில் 24,800 குடும்ப அட்டைகளுக்கு ராம்கோ கூட்டறவு பண்டகசாலை மூலம் பொது  விநியோக நியாவிலைக்கடைகளில் விநியோகம் செய்தனர். வழங்கும்
 தமிழக அரசு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கள் திருநாளை முன்னிட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கும், காவலர் வனக் காவலர் மற்றும் இலங்கை தமிழ் அகதிகள் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்பு, முந்திரி 20 கிராம், உலர்திராட்சை 20 கிராம் மற்றும் ஏலக்காய் 5 கிராம் மற்றும் கரும்பு ஆகிய பொருள்களை பரிசாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.அதன் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கள் பொருள்களை பொது விநியோக கடைகளில்  பொதுமக்களுக்கு தமிழக அமைச்சர்கள் வழங்கி தொடங்கி வைத்தனர்.அதன் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.இதனையொட்டி ராமேசுவரம்  நடராஜபுரம் பொதுவிநியோக நியாவிலைக்கடையில் கடந்த 6 ஆம் தேதி சனிக்கிழமை இலவச பொங்கல் பொருள்களை பொதுமக்களுக்கு ராமேசுவரம் வட்டாட்சியர் கணபதிகாந்தன்,ராமேசுவரம் வட்ட வழங்கல் அலுவலர் லலிதா ஆகியோர்கள் வழங்கி தொடங்கி வைத்தனர்.இதனையொட்டி ராமேசுவரம்,தங்கச்சிமடம்,பாம்பன் ஆகிய பகுதிகளில் ராம்கோ கூட்டறவு பண்டகசாலை மூலம் இயங்கி வரும் 32 பொது விநியோக கடைகளில் 20,200 குடும்ப அட்டைகளுக்கும்,மண்டபம் மற்றும் மண்டபம் அகதி முகாம் உள்பட ஆகிய பகுதிகளில் 4,600 குடும்ப அட்டைகளுக்கும் சேர்த்து மொத்தம் 24,800 குடும்ப அட்டைகளுக்கு இலவச பொங்கல் பொருள்கள்  வழங்கி முடிக்கப்பட்டதாக ராம்கோ கூட்டறவு பண்டகசாலை ஊழியர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து