முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ராப்ரிதேவி

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
மாநிலங்களவையில் காலியாகவுள்ள 58 உறுப்பினர் பதவிகளுக்கு அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பீகாரில் இருந்து 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தற்போது இந்த 6 பதவிகளில் 4 ஆளும் ஐக்கிய ஜனதா தளம் வசமும் 2 அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க வசமும் உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கு இந்தப் பதவிகள் செல்லும் என கணக்கிடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு லல்லுவின் கட்சிக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்தது. அவற்றில் ஒன்றை தனது மகள் மிசா பாரதிக்கும் மற்றொன்றை தனது வழக்குகளில் வாதிட்ட ராம்ஜெத்மலானிக்கும் லல்லு ஒதுக்கினார். அப்போது முடிந்த பீகார் தேர்தலில் லல்லு, தனது மகன் தேஜஸ்வியை துணை முதல்வராக்கினார்.

இதில் அதிருப்தி அடைந்த மிசா பாரதியை சமாளிக்க அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இல்லையெனில் அப்போதே மிசாவுக்கு பதிலாக ராப்ரி அனுப்பப்பட்டிருப்பார். எனவே இந்தமுறை 2 பதவிகளில் ஒன்றை லல்லு தனது மனைவிக்கு ஒதுக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து