முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

ரங்கூன், மியான்மரில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிகடர் அளவுகோலில் 5.3-ஆக பதிவாகியது.

இதுகுறித்து மியான்மர் தரப்பில், மியான்மரின் போகோ மாகாணத்தில் நேற்று  அதிகாலை மிதமான நிநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிகடர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கம் பூமிக்கடியில் 27 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்க அதிர்வு யாங்கான், தவான்கோ, பையூ, ஆகிய இடங்களில் உணரப்பட்டது” என்று கூறப்பட்டது.

நில அதிர்வு பரவலாக மியான்மரின் பரவலான இடங்களில் உணரப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்ததாகவும் மியான்மர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மீட்புப் பணி வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து