அமெரிக்காவுடனான கூட்டு ராணுவ பயிற்சியை தென் கொரியா கைவிட வேண்டும்: வடகொரியா நிபந்தனை

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      உலகம்
South Korea

பியாங்கியாங், அமைதி ஏற்பட அமெரிக்காவுடனான கூட்டு ராணுவ பயிற்சியை கைவிடுமாறு தென் கொரியாவை வடகொரியா வலியுறுத்தி உள்ளது.

தென்கொரியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா முடிவு செய்துள்ளது. இரு நாட்டு உயர் அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. மேலும் பிரச்சினைக்கு தீர்வு காண ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வடகொரியாவின் தொழிலாளர் கட்சி சார்பில் வெளியாகும் ரோடாங் சின்மன் பத்திரிகையில் வெளியாகி உள்ள கட்டுரையில், “கொரிய தீபகற்ப பகுதியில் உண்மையிலேயே அமைதியை நிலைநாட்ட விரும்பினால், அமெரிக்காவுடனான கூட்டு ராணுவ பயிற்சியை தென்கொரியா கைவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து