முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா மீண்டும் தயார் அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வடகொரியா இதுவரை 6 முறை அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனைகள் அனைத்தும் அந்த நாட்டின் மேன்டப் மலைப்பகுதியில் நடந்தன. இந்நிலையில் புதிதாக அணு ஆயுத சோதனை நடத்த மேன்டப் மலையின் புங்கி-ரி பகுதியில் புதிதாக சுரங்கம் தோண்டப்படுகிறது என்று அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் புகைப்படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனும் நல்ல உறவு முறையில் இருக்கிறேன். நான் கிம்முடன் பேசினேனா, இல்லையா என்பது குறித்து எதுவும் கூற முடியாது’’ என்று தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடும் சொற்களால் பரஸ்பரம் விமர்சித்து வந்தனர். இதில் திடீர் திருப்பமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து