அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய இளைஞரின் மனைவிக்கு நாடாளுமன்ற கூட்டத்துக்கு அழைப்பு

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      உலகம்
parliment 2017 12 10

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றும் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, அமெரிக்காவில் இனவெறியால் கொல்லப்பட்ட இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவி சுனன்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா கடந்த ஆண்டு பிப்ரவரியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இனவெறி காரணமாக அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் இவரை சுட்டுக்கொன்றார்.

ஸ்ரீனிவாஸின் மனைவி சுனன்யா துமாலா (32). ஸ்ரீனிவாஸை திருமணம் செய்தவர் என்ற முறையில் அமெரிக்காவில் வசிக்க அவருக்கு அனுமதி தரப்பட்டிருந்தது. இந்த அனுமதி முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்து அமெரிக்காவில் வசிப்பதற்கான அனுமதி அவருக்கு தரப்பட்டுள்ளது.


இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 30-ம் தேதி வருடாந்திர உரையாற்ற உள்ளார்.

இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு சுனன்யாவுக்கு கெவின் யோடர் என்ற எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார். “அமெரிக்கா அன்பான நாடு அனைவரையும் வரவேற்கும் நாடு என்ற செய்தியை இந்திய சமூகத்தினர் மற்றும் இங்கு குடியேறிய மக்களுக்கு விடுப்பதற்காகவே சுனன்யாவுக்கு அழைப்பு விடுத்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

சுனன்யா தனது கணவரின் முதலாமாண்டு நினைவு நிகழ்ச்சிக்காக இந்தியா வர திட்டமிட்டுள்ளார். “நண்பர்கள், உறவினர்கள், அருகில் வசிப்பவர்கள் மற்றும் அறிமுகமில்லாத பலர் எனக்கு ஆதரவாக உள்ளனர்” என்றார் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து