இளைஞர்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      இந்தியா
pm modi 2017 12 31

புதுடெல்லி : இளைஞர்களின் புதுமையான முயற்சிகளுக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும், இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவிலுள்ள கவுதம புத்தர் பல்கலைக்கழகத்தில்  தேசிய இளைஞர் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வீடியோ-கான்பரன்ஸிங் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது. இப்போதுள்ள இளைஞர்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் எழுச்சிக்கும் புதிய புதிய திட்டங்களை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்.


சரியான பாதையை இளைஞர்கள் தேர்வு செய்யவேண்டும். அது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதாக இருக்கும். மற்றவர்களும் அதில் சேர்ந்துகொள்வார்கள். இளைஞர்களின் புதுமையான முயற்சிக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும். - பிரதமர் மோடி

சரியான பாதையை இளைஞர்கள் தேர்வு செய்யவேண்டும். அது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதாக இருக்கும் நிலையில் மற்றவர்களும் அதில் சேர்ந்துகொள்வார்கள். இளைஞர்களின் புதுமையான முயற்சிக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும்.

எனவே கவலைப்படாமல் உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள். வங்கி உத்தரவாதம், கடன் வழங்குதல் உள்ளிட்ட நடைமுறைகளில் அரசு உங்களுக்கு உதவ தயாராக உள்ளது. அதனால் கவலைப்படாமல் புதிய திட்டங்களை உருவாக்குங்கள். தொழில் முனைவோருக்கு இது அரிய வாய்ப்பு. இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் முத்ரா திட்டம், ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா திட்ட நிதிகளை தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபோலவே இளைஞர்கள், விளையாட்டையும் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக் கொள்ளவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து