ஆஸ்திரேலிய ஓபன்: யுகி பாம்ப்ரி அபாரம்

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      விளையாட்டு
Yuki Bhambri 2018 1 13

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த தகுதி சுற்றில் ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி ஸ்பெயின் வீரரை வீழ்த்தினார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. தற்போது இதன் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் தனது 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 122-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, உலக தரவரிசையில் 183-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் தபெர்னெரை எதிர்கொண்டார். 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 6-0, 6-2 என்ற நேர்செட்டில் எளிதில் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து