முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபாச பட நடிகையையும் விட்டு வைக்காத ட்ரம்ப்? அம்பலமான உண்மைகள்

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் :  உறவு வைத்துக் கொண்டதை வெளியே சொல்லாமல் இருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில் ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் என்பவருக்கு $130,000 தொகை கொடுக்கப்பட்டதாக அமெரிக்க முன்னணி நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

டொனால்ட் டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென், ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட்டுக்கு பணம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 2006ம் ஆண்டு கலிபோர்னியாவில் டிரம்ப் மற்றும் ஸ்டீபனி கிளிஃபோர்ட் உறவு வைத்துக்கொண்டதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. டிரம்ப், மெலானியாவை 3வது மனைவியாக மணம் முடித்த அடுத்த ஓராண்டில், நடிகையுடன் உல்லாசமாக இருந்துள்ளார் என்பதே அந்த செய்திக்கான அர்த்தம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சிட்டி நேஷனல் பேங்கின் வழியாக, இந்த பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் நடிகை வாய் திறக்காமல் இருக்க பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு விளக்கம் அளித்துள்ளார் மைக்கேல் கோஹென்.

மைக்கேல் கோஹென் கூறுகையில், 2011 முதலே இந்த வதந்தி பரப்பப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே இதற்கு மறுப்பு கூறியுள்ளார் என்றார். ஸ்டீபனி கிளிஃபோர்ட் கூறுகையில், டிரம்ப்பிடமிருந்து நான் பணம் பெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது. அப்படி ஒரு உறவு இருந்திருந்தால், அதை நீங்கள் நியூசாக வாசித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். எனது புத்தகத்தில் வாசித்திருப்பீர்கள் என கூறியுள்ளார் அவர்.

மைக்கேல் கோஹென் பெயர் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை இல்லை. அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டிலும் மைக்கேல் கோஹென் பெயர் அடிபட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் செய்தித் தொடர்பாளருக்கு, மைக்கேல் கோஹென் இமெயில் அனுப்பியதாக சர்ச்சை எழுந்திருந்தது.

நடிகை, ஸ்டீபனி கிளிஃபோர்ட்டின் தாய் ஷீலா வெய்மர் கூறுகையில், நான் எனது மகளுடன் பேசியே 12 வருடங்கள் ஆகிறது. எனவே டிரம்ப்புடன் அவருக்கு தொடர்பு இருந்ததா, சட்டப்படி செட்டில்மென்ட் செய்யப்பட்டதா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எனது மகளுக்கு ஸ்டோர்மி என பட்டப்பெயர் இருப்பதுகூட எனக்கு தெரியாது. ஆனால்ட் டிரம்ப் ஒரு நல்ல நிர்வாகி. அமெரிக்காவை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து