முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மாவதி படத்துக்கு 3 மாநிலங்களில் தடை - உ.பி.யில் அனுமதி

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றை சித்தரிக்கும் பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியாவதாக இருந்த படம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சார் போர்டு அனுமதி வழங்கியது. வருகிற 25ம் தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது.

ராஜஸ்தான் அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பத்மாவதி திரைப்படத்துக்கு தடை விதித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதே போல் குஜராத் மாநில அரசும் படத்துக்கு தடை விதித்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் பத்மாவதி திரைப்படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சூசகமாக தெரிவித்துள்ளார். கோவாவில் சுற்றுலா சீசன் வருவதால் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று விடுவார்கள். இதனால் பத்மாவதி படத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க இயலாது. எனவே பத்மாவதி படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று போலீசார் சிபாரிசு செய்துள்ளனர். பத்மாவதி படத்தில் மாற்றங்கள் செய்திருப்பதன் மூலம் உத்தரபிரதேசத்தில்  படத்துக்கு எந்த தடையும் இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து