முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணாமல் போன கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காணாமல் கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடும் பணியை தொடர வேண்டும் என்று பிரதமருக்கு வலியுறுத்தியிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார், இது குறித்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டிட, 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து, இலங்கை அரசிடமிருந்து கச்சத் தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை, அம்மாவின் வழியிலேயே, அவரது அரசும் மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தும். இது தவிர, இந்த அரசின் இடையறாத முயற்சியின் காரணமாக ஈரான் சிறையிலிருந்த 15 மீனவர்களும், இலங்கை சிறையிலிருந்த 263 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

மேலும், இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பதற்கு, இந்த அரசு, மத்திய அரசின் மூலமாக தனது நடவடிக்கையினை தீவிரப்படுத்தும். கடந்த 30.11.2017 அன்று வீசிய ‘ஓகி’ புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசுபோர்க்கால நடவடிக்கையின் காரணமாகவும், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நிவாரணம் வழங்கியதாலும் குறுகிய காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

‘ஓகி’ புயலினால் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு நிவாரணங்கள் அறிவித்திருந்தாலும், தற்போது ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த குலசேகரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் புகை  மூட்ட அறை ஒன்றினை 68 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்திடவும், இதனை ரப்பர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் செயல்படுத்திடவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், தேவைக்கேற்ப பல்வேறு திட்டங்களை ரப்பர் விவசாயிகளுக்கு அரசு வழங்க இருக்கிறது.

ஆழ்கடலுக்குச் சென்று நாளது தேதி வரை கரை திரும்பாத கடைசி மீனவர் கிடைக்கின்ற வரையில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு விலை மதிப்பில்லா உயிர்களை மீட்கும் பொருட்டு இதனை வலியுறுத்தி சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து