முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி குறித்து கிண்டல் வீடியோ: காங். மன்னிப்பு கேட்க பா.ஜ வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, உலகத் தலைவர்களை கட்டிப்பிடித்து மோடி வரவேற்பதை கிண்டல் செய்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோவை நீக்க வேண்டும் என்றும், இத்தகைய செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, உலகத் தலைவர்களை கட்டிப் பிடித்து வரவேற்பதை கிண்டல் செய்து காங்கிரஸ் வீடியோவுடன் ஒரு டுவிட் செய்து உள்ளது. இது ஒரு முதிர்ச்சியற்றது  என்றும், இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பா.ஜ.க. கோரி உள்ளது.

காங்கிரஸ் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகு இந்தியாவுக்கு வருகை தருகையில், பிரதமர்  மோடியிடம் கட்டியணைத்து வரவேற்றார் என்பதை குறிப்பிட்டு உள்ளது. காங்கிரசின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் அது வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் போன்ற உலக தலைவர்களை அணைத்துக் கொள்வதும் காட்டப்பட்டு உள்ளது. டைட்டானிக் படத்தின் கப்பலில் செல்லும் காட்சி ஒன்றும் அதில் காட்டப்பட்டு உள்ளது.

மத்திய அமைச்சர் கண்டனம்

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் கூறியதாவது:
இத்தகைய விமர்சனம் காங்கிரசின் அரசியல் உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது. அவர்கள் டுவீட் அவர்களுடைய அறியாமை மற்றும் அரசியல் உணர்ச்சி வயப்படும் தன்மையை காட்டுகிறது. நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்த தெளிவு ஒரு நாள் அவர்களுக்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து