முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பனிமூட்டம்: 13 ரயில்கள் ரத்து

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பனிமூட்டம் காரணமாக 39 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடும் பனிமூட்டம் நிலவுகிறது. காலை வேளைகளில் கடும் குளிருடன் வெண் படலமாக பனிமூட்டம் காட்சியளிக்கிறது. இதனால், சில அடி தூரமே கண்ணுக்கு புலப்படுகின்றன. வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே செல்வதை காண முடிந்தது.

அடர் பனிமூட்டத்தால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டதால், 39 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காற்று மாசுவும் டெல்லியில் அதிக அளவில் காணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து