முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ஆரியங்காவு-இடமன் இடையே விரைவில் ரயில் சேவை -பாதுகாப்பு ஆணையர் பேட்டி

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      திருநெல்வேலி

கேரள மாநிலம்புதிய ஆரியங்காவு- எடமண் இடையே ரயில்சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து இவ்வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கூறினார்.

ரயில் சேவை

நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான  மீட்டர் கேஜ்  ரயில் பாதையை பிராட் கேஜ் பாதையாக மாற்ற கடந்த 2010- ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. 51 கிலோ மீட்டர் தூரம் உள்ளடக்கிய இந்த தடத்தில்  40.05 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கும்  பணிகள்  நிறைவு பெற்றுள்ளது.புதிய  ஆரியங்காவு முதல் எடமன் வரையில் சுமார் 21  கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம்  மற்றும்  புதிய குகை அமைக்கும் பணிகளும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது . இந்த வழித்தடத்தில் தற்போது  தண்டவாளங்கள், கட்டுமானம் என பல கட்டங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.இறுதியாக புதிய ஆரியங்காவு முதல் எடமன் வரை  அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் தண்டவாளங்களின் உறுதி தன்மை , பாதைகளின் தரம், சிக்னல்கள், ரயில் நிலைய கட்டிடங்கள், கழிப்பிடவசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும்   தென்னக ரயில்வே  பாதுகாப்பு ஆணையர் மனோகரன்  ட்ராலி மூலமும், பார்வையிட்டு  ஆய்வு நடத்தினார்.இதனை அடுத்து புதிய ஆரியங்காவு முதல் எடமண் வரையிலான புதிய பாதையில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீனு ரத்தாரியா ஆகியோர் முன்னிலையில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி ஆய்வு நடைபெற்றது காலை ரயில் ஒரு பெட்டியுடன் மற்றொரு சோதனை பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு அந்த ரயில் இயக்கப்பட்டது.புதிய ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய ரயிலானது சோதனை அதிகாரிகளுடன் எடமண் ரயில் நிலையம் வரை சென்றது. இடையில் உள்ள குகைப்பகுதிகள், பாலங்கள், 13 கண் பாலம் ஆகியவற்றில் பாதுகாப்பு பணிக்காக ரயிவே காவல் துறையினர் நின்றனர் அந்த பகுதிகளில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எடமண் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ரயில்வே கோட்ட மேலாளர் நீனு ரத்தேரியா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது பேசிய கோட்ட மேலாளர் நீனு ரத்தாரியா, ஆணையரிடமிருந்து அறிக்கை கிடைத்த பின்பு ரயில் இயக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் பேசிய ஆணையர் மனோகரன் இரண்டு வாரங்களில் ரயில்வே துறைக்கு ஆய்வறிக்கையை சமர்பிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் கலந்து ஆலோசித்து விரைவில் இரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடைபெற்ற சோதனை வரையில் பெரிய பாதிப்புகள் இல்லை. இந்த பாதையில் அதிகமான பாலங்கள் திருப்பங்கள் இருந்ததால் ரயில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது என்று கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து