தன்வந்திரி பீடத்தில் 14ம் ஆண்டு சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      வேலூர்
wj 1

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தை பொங்கல் எனும் உழவர் திருநாளை முன்னிட்டு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் 14 ம்ஆண்டு சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா நடைபெற்றது.

காலச்சக்ர பூஜை

இதனையொட்டி நேற்று காலை 6.00 மணிக்கு கோபூஜை, நித்ய பூஜைகள், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கும் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நாட்டு நலனுக்காகவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் இயற்கை வளத்திற்காகவும் ஸ்ரீ சூக்த ஹோமம், பூ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், ஆரோக்ய லக்ஷ்மி ஹோமமும், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரகங்களுக்குரிய விருட்சங்களுக்கு காலச்சக்ர பூஜையும், நடைபெற்றது.

தன்வந்திரி பீடத்தில் உள்ள சேவார்த்திகளும் பக்தர்களும் சேர்ந்து வண்ணக் கோலமிட்டு தோரணங்கள் அமைத்து புதிய அடுப்பு செய்து புதுபானையில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள், பூசிணியிலை, வாழை இலை போன்ற பொருட்களில் பழ வகைகள், பல வண்ண புஷ்பங்களுடன் சூரிய பகவானுக்கு படைத்து பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்துடன் பக்தர்கள் சூரிய வழிபாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியதேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அதே போல் 12 ஆழ்வார்கள் பாடியநாலாயிர திவ்ய பிரபந்தம், என பல்வேறு சமயநுல்களை ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்க ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்யபீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கி ஆசிர்வதித்தார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து