முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுவட்சா-தர்சனா மற்றும் அம்ரூட் ஆகிய திட்டத்தில் ரூ.11 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்.

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- இராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவட்சா-தர்சனா மற்றும் அம்ரூட் ஆகிய திட்டத்தின் கீழ் ரூபாய் 11 கோடியே,75 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கான பகுதிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தா் சிங், மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
தொன்மை வாய்ந்த புனிதஸ்தலமான இராமேஸ்வரம் நகரில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பில் கடலோர பகுதிகள் மேம்பாட்டுத் திட்டம் (சுவட்சா-தர்சனா) மற்றும் அம்ரூட் ஆகிய திட்டங்களின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறிப்பாக கடலோர பகுதிகள் மேம்பாட்டுத் திட்டம் (சுவட்சாதர்சனா) திட்டங்களின் கீழ் இராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் கடற்கரை பகுதியில் சுத்திகாரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைத்தல், நவீன கழிப்பறைகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைத்தல், நடைபாதைகள் சீரமைத்து மற்றும் நீட்டிப்பு பணிகள் அமைத்தல் முதலுதவிப்பணிகள் அமைத்தல்.,அக்னஇதீர்த்தம் கடற்கரை பகுதியில் நீராடும் பக்தர்கள் தேவைக்கு துணிமாற்றும் அறை அமைத்தல், ஏற்கனவே அப்பகுதியில் அமைந்துள்ள பூங்காவிவ் சீரமைப்பணிகள் செய்தல், அணுகுசாலை அமைத்தல், பேட்ரிகார்கள் வாழங்குதல், சூரிய ஒளிமின்சக்தி விளக்குகள் அமைத்தல் மற்றும் அக்னிதீர்த்த்ததில் பக்தர்கள் நீராடும் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக படிக்கட்டுகள் அமைத்தல் ஆகிய மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.943.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
அதேபோல, அம்ரூட் திட்டத்தின் கீழ் 3 எண்ணம் பசுமைப் பரப்புடன் கூடிய பூங்கா பணிகள் ரூ.150.00 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2017-20 ஆம் ஆண்டிற்கான நிதியின் கீழ் மேலும் ஒரு பசுமை பரப்புடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகளுக்காக ரூ.232 இலட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளன. அதே வேளையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் இராமேசுவரத்திற்கு நேற்று வருகை தந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளார் .ஹா்மந்தா் சிங், அம்ரூட் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 3 எண்ணம் பசுமைப் பரப்புடன் கூடிய பூங்கா பணிகள் ரூ.150.00 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு பணிகளுக்கான பூர்வாங்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் பணிகளை விரைவாக நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஜானகி ரவீந்திரன், மண்டல செயற்பொறியாளர் சச்சிதானந்தம்,ராமசுவரம் நகராட்சி ஆணையாளா், வீரமுத்துகுமார், நகராட்சி பொறியாளா; திரு.எஸ்.வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து