முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நேற்று (ஜனவரி 15) துவங்கியது. வரும் 28 ஆம் தேதி இந்த தொடர் நடைபெறுகிறது. இந்த  தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில்  உலகின் 5 ஆம் நிலை வீரரான வீனஸ் வில்லியம்ஸ் சுவிட்சர்ந்துலாந்தின் இளம் வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் பலப்பரிட்சை நடத்தினர்.

எதிபார்த்ததைவிட மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் இருந்தே வீனஸ் வில்லியம்ஸ் பின் தங்க துவங்கினார். வீனஸ் வில்லியம்ஸ்க்கு கடும் சவால் அளித்த பென்சிக்,   6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வீனஸ் வில்லியம்ஸ்க்கு அதிர்ச்சி அளித்தார். இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றிலேயே வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து