தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு பொன்மொழி விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் எஸ்பி பெ.மகேந்திரன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      தூத்துக்குடி
tutycorin sp

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி பெ.மகேந்திரன் பரிசு வழங்கினார்.

பொன்மொழி போட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக காவல் கண்காணிப்பாளர்   பெ. மகேந்திரன் அவர்களால் கடந்த 09.12.2017 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து 20 வார்த்தைகளுக்கு மிகாமல் சிறந்த பொன்மொழியை உருவாக்குபர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி போட்டி பரிசு வழங்கும் விழா’ தைத்திருநாளான 14.01.2018 அன்று மாலை 0430 மணிக்கு முத்து நகர் கடற்கரையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; பெ.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்;  சிறந்த 21 பொன்மொழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதனை இயற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களும் சிறப்புப் பரிசும் தனித்தனியே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது.இவ்விழாவில், போலீஸ் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டியதுடன், சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கவும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தவறாமல் தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்து விபத்தில்லா பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.இவ்விழாவில் 20 வார்த்தைகளுக்கு மிகாமல் உருவாக்கப்பட்ட சிறந்த பொன்மொழியை தேர்ந்தெடுத்து தகுந்த பரிசினை 10 காவல்துறையினருக்கும் 10 பொதுமக்களுக்கும் தனித்தனியே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் வழங்கினார். விழாவில் டிஎஸ்பி லிங்கதிருமாறன்இ ன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன் சந்தனகுமார் ஊர்க்காவல்படை வட்டார துணைத் தளபதி கெளசல்யாஇ உட்பட காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் விதமாக தலைக்கவச மணல் சிற்பம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக முத்துநகர் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து