முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு டிஜிட்டல் கேபிள்டிவி சேவை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செட்டாப் பாக்ஸ்களை வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் தமிழக அரசின் டிஜிட்டல் கேபிள்டிவி சேவையை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அரசு செட்டாப் பாக்ஸ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் தமிழக அரசின் டிஜிட்டல் கேபிள்டிவி சேவை துவக்கவிழா மற்றும் பயனாளிகளுக்கு அரசு செட்டாப் பாக்ஸ் வழங்கிடும் விழா டி.கல்லுப்பட்டியில் உள்ள கம்மவார் மஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு அரசு கேபிள்டிவி தனி தாசில்தார் லயனல்ராஜ்குமார்,பேரையூர் தாலுகா தாசில்தார் உதயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரையூர் தாலுகா கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் சங்க செயலாளர் மதிவாணன் வரவேற்று பேசினார். நூற்றுக்கணக்கான கேபிள்டிவி ஆபரேட்டர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று பேரையூர் தாலுகாவில் அரசு கேபிள்டிவி சேவையினை ரிமோட் கண்ட்ரோல் பட்டனை அழுத்தி தொடங்கி வைத்தார்.பின்னர் தமிழக அரசின் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை பேரையூர் தாலுகாவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: கடந்த தி.மு.க ஆட்சியில் கேபிள்டிவி தொழில் கபளீகரம் செய்யப்பட்டு கேபிள்டிவி தொழில் செய்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை காணப்பட்டது.இந்த நிலையை மாற்றிக் காட்டுவேன் என்று சபதம் செய்தபடி அம்மா அவர்கள் கேபிள்டிவியை 2011ல் அரசுடமையாக்கி கேபிள்டிவி உரிமையாளர்களின் தொழிலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு வழங்கினார். தற்போதும் கேபிள்டிவி ஆபரேட்டர்களை பாதுகாத்திடும் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது.கேபிள்டிவி ஆபரேட்டாகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை வருவதற்கு முன்பாக நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு தந்திடுவோம்.மக்களுக்கான டிஜிட்டல் சேவைகளை இந்தியாவிலே முதன் முதலாக தமிழகத்தில் அறிமுகம் செய்து சாதனை படைத்தவர் அம்மா மட்டும் தான்.அதே போல் இந்தியாவில் அரசு டிஜிட்டல் கேபிள்டிவி தொழில்நுட்பத்திற்கு முதன் முதலாக அனுமதிபெற்ற ஒரே மாநிலம் தமிழகம் தான்.வரும் காலங்களில் ஜனநாயகத்தின் 5வது தூணாக கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் திகழ்வார்கள்.அம்மா ஆன்மாவின் நல்லாசியுடனும் உங்கள் ஆதரவுடனும் அன்னைத் தமிழகத்தை அ.தி.மு.க இன்னும் 100ஆண்டுகள் ஆடசி செய்திடும்.அதே போல் உங்களது நீண்டகால கோரிக்கையான கேபிள்டிவி ஆபரேட்டர்களுக்கு நலவாரியம் அமைப்பதற்கான முயற்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று பேசினார்.
இவ்விழாவில் கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட இலக்கியஅணிச் செயலாளர் திருப்பதி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணைச் சேர்மன் டாக்டர்.பாவடியான்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன்தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம்,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,முன்னாள் கவுன்சிலர் பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,பேரையூர் கேபிள்டிவி ஆபரேட்டர்கள் சங்க சட்ட ஆலோசகர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கேபிள் டிவி சங்க மாநில தலைவர் டி.வி.ரமேஷ்,மாவட்ட தலைவர் அசோக்,உசிலம்பட்டி தாலுகா தலைவர் மதிப்பிரகாஷ்,திருமங்கலம் தாலுகா தலைவர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை பேரையூர் தாலுகா அரசு கேபிள்டிவி நிறுவன பி.பாஸ்கரன் செய்திருந்தார்.விழாவின் நிறைவில் பேரையூர் தாலுகா கேபிள்டிவி ஆபரேட்டர்கள் நலச்சங்கத்தின் தலைவர் மாரிச்செல்வம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து