முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரம்ப்பின் நாடாளுமன்ற உரை புறக்கணிப்பு: இந்திய வம்சாவளி பெண் எம்.பி. அறிவிப்பு

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நாடாளுமன்ற உரையைப் புறக்கணிக்கப் போவதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் அறிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சேர்ந்த கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் வரும் 30-ம் தேதி உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதிபர் டிரம்ப்பின் கொள்கைகள், பிற இனத்தவர்களுக்கு எதிரான பேச்சு, அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு கெடுபிடிகள் உள்ளிட்டவற்றை கண்டித்து, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் பலர், டிரம்ப் உரையாற்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஜனநாயக கட்சியின் சார்பில் எம்.பி. ஆன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபாலும் டிரம்ப் உரையை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிபர் டிரம்ப் தொடர்ந்து இன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தவறாகப் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் பின்பற்றி வரும் கொள்கைகளால் அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறிய மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார். மற்ற நாடுகளுடனும் சுமுகமான உறவை அவர் கடைப்பிடிக்க தவறி விட்டார். எனவே, மற்ற எம்.பி.க்களுடன் சேர்ந்து, அவரது நாடாளுமன்ற உரையைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன் என்று பிரமிளா ஜெயபால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து