முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் அறிவுரை

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

டெஹ்ரான், இஸ்லாமிய நாடுகள் முன்னேற்றத்திற்காக வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டாம் என்று ஈரான் அதிபர் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்ற அமர்வின்போது ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, இஸ்லாம் நாடுகள் முன்னேற்றுத்திற்காக பிற நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டாம். வெளி நாடுகளைச் சார்ந்து இருக்காத பட்சத்தில்தான் நம்மிடையே ஒற்றுமை ஏற்படும். நம்மிடையே நிலவும் பிரச்சினைகளை காண முடியும். நம்மிடையே வளர்ச்சி ஏற்பட நமது திறன்களை நம்ப வேண்டும் என்றார். ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வரும் டிரம்ப்பின் யோசனையை அந்நாடு நிராகரித்துள்ளது. முன்னதாக அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிய ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் இல்லையேல் 2015-ல் அந்நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து