முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையத்தில் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அதிமுகவினர் பேரணி

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் -ராஜபாளையத்தில் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ராஜபாளையத்தில் மறைந்த  தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் நிறுவனருமாகிய எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.முன்னதாக முன்னாள் மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் நகரச் செயலாளர் பாஸ்கரன்; பழைய பேருந்து நிலையத்தில் இருந்து எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்துடன் காந்தி சிலை ரவுண்டாணா,சங்கரன்கோவில் முக்கு, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ரயில்வே பீடர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு முன்பு பட்டாசு வெடித்தும், பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் வேல்முருகன்,குருசாமி, முன்னாள் ஒன்றியச் தலைவர் பொன்னுத்தாய், முன்னாள் தொகுதிச் செயலாளர் வனராஜ், அவைத்தலைவர் பரமசிவம், நகர,ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து