முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியைப் போல் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கும் வசதிகள்: கேரள அரசு ஆலோசனை

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், திருப்பதியைப் போல சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கும் வசதிகள் செய்து தருவது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில தேவசம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் போல சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கும் வசதிகள் செய்வது பற்றி கேரள அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் திருப்பதிக்கு சென்று பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆராயும். இது தொடர்பாக எல்லா உதவிகளையும் செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.

நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், சபரிமலையிலும் பக்தர்களுக்கான வசதிகளை எப்படி செய்வது என்பது பற்றி திட்டம் வகுக்கப்படும். சபரிமலை கோயில் வனப்பகுதியில் அமைந்திருப்பதால் அதற்கேற்ப திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு மகர விளக்கு தினம் வரை சபரிமலை கோயிலின் மொத்த வருமானம் ரூ.255 கோடி. இது கடந்த ஆண்டை விட ரூ.45 கோடி அதிகம். இந்த ஆண்டு பல்வேறு கட்டுமானப் பணிகளுக்காக ரூ.38 கோடி செலவிடப்பட்டது. இதுபோல பக்தர்களின் வசதிகளை அதிகரிப்பதற்காக பல கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து