நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா கலைவிழா : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பங்கேற்பு

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      நாகப்பட்டினம்
pro nagai

நாகப்பட்டினம் புதிய கடற்கரை வளாகத்தில் சுற்றுலாத்துறை, ரோட்டரி சங்கம் மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை மேம்பாட்டுக்குழு சார்பில் பொங்கல் சுற்றுலா கலைவிழா -2018-ல் கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பங்கேற்றார்.

கலை விழா

விழாவில் புதிய கடற்கரையில் அமைந்துள்ள நாகப்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் பராமரிப்பில் உள்ள சிறுவர் பூங்கா கலையரங்கில் கிராமிய கலைக்கழுவினரின் கலைநிகழ்ச்சிகளான நாட்டுப்புற பாடலுடன் ஆடல், காவடி ஆட்டம், நையாண்டி மேளம், பச்சை, பவள காளியாட்டம் போன்ற கலைநிகழ்சிகள் நடைபெற்றன.

விழாவில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, "தமிழ்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு வகைகள் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். மேலும் விழாக்கள் குறிப்பாக நாட்டியம் மற்றும் இசை விழாக்கள் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்ப்பதால் வருடம் முழுவதும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது தொடர்பாக 2016-17 ம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறையின் மானிய கோரிக்கையில் சுற்றுலாத்துறை அமைச்சர், ஒரு சுற்றுலா தலத்திற்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்த ரூ. 1 லட்சம் வீதம் பகிர்ந்தளித்து அறிவித்தார்கள். அதனடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு சுற்றலாத்தலங்களில் அந்தந்த சுற்றுலா அலுவலர்கள் மூலம் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

கடந்த ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்று சிறப்படைந்துள்ளது. இவ்வாறு சுற்றுலாத்துறை மென்மேலும் பயனடைந்தால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்வதோடு, தமிழகத்தில் நலிவுற்ற கிராமிய இசைக் கலைஞர்களின் வாழ்வும் செழிப்படையும். நம் தமிழகத்தைத் தேடி வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக் எந்தவித தீங்கும் செய்யாமல், சகோதரப் பாசத்தோடு வழிநடத்திட நாம் அனைவரும் இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்." என தெரிவித்தார்.

இவ்விழாவில் நாகப்ட்டினம் மாவட்ட சுற்றுலா அலுவலர் என்.மாதவன், நாகப்பட்டினம் கடற்கரை மேம்பாட்டுக்குழு செயலர் முனைவர்.மேஜர்.கோவிந்தராஜிலு, நாகப்பட்டினம் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து