அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் கலெக்டர் க.லட்சுமி பிரியா நேரில் ஆய்வு

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      அரியலூர்
Pro Ariyalur

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கா.அம்பாபூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அங்கன்வாடி ஆகிய பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

கலெக்டர் ஆய்வு

கா.அம்பாபூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் , 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுடைய அரையாண்டுத் தேர்ச்சி விகிதங்களை பாடவாரியாக ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்து கூறி ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளிகளில் உள்ள அறிவியல் உபகரணங்கள், கணித உபகரணங்களை சரியான முறையில் உபயோகித்து பயன்படுத்தி மாணவர்கள் தங்களுடைய கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.தொடக்கப்பள்ளியை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பள்ளியின் வளாகங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ளதா எனவும், பள்ளியின் கழிவறை மற்றும் பள்ளி வகுப்பறைகளையும் மற்றும் சத்துணவு வழங்கப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உத்தரவு பின்னர், மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் மாணவ, மாணவியர்கள் பள்ளி வேலை நேரங்களில் எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்களை வெளியே அனுப்பக் கூடாது என உத்தரவிட்டார்.

அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அமைப்பாளரிடம் குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போல அன்பாகவும், அரவனைப்பாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ளுதல் மற்றும் நல்பழக்கவழக்கங்களை இளம் வயதிலே கற்றுகொடுக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி அமைப்பாளர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து