வேப்பூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் : கலெக்டர் வே.சாந்தா நேரில் ஆய்வு மேற்கொண்டார்

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      பெரம்பலூர்
pro pmb

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர்; ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் வே.சாந்தா நேற்று (17.01.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நொச்சி செடிகள்

அதன்படி, வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மற்றும் மரக்கன்றுகள் தேவைப்படுவோர் இல்லங்களிலும், மரக்கன்றுகளை நடுவதற்காக வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமாந்துறை ஊராட்சியில் ரூ.16.18 லட்சம் மதிப்பீட்டில் பசுமைவலைக் குடில் அதை;து அதில் நொச்சிச் செடிகள் வளர்க்கப்பட்டு வரும்பகுதிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் மரக்கன்றுகள் வளர்க்க விரும்பும் பொதுமக்களுக்கும் கன்றுகளை வழங்கிட வேண்டும் என்றும், நல்ல முறையில் பராமரித்து வளர்ப்பதற்கு தேவையான வழிமுறைகளை வழங்க வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து திருமாந்துறை-கைகாட்டி அருகில் உள்ள நோவன் நகரில் சிதம்பரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் உள்ளுர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வளர்ச்சித்துறையை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து திருமாந்துறை ஊராட்சியில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீட்டின் கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். பசுமை வளாகம் அதனைத்தொடர்ந்து லப்பைக்குடிகாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை புரிந்த மாவட்ட கலெக்டர் மருத்துவமனையின் அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஆய்வுசெய்தார்.

நோயாளிகளின் வசதிக்காக ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள புறநோயாளிகளுக்கான பிரிவின் கட்டுமானப் பணிகளை விரைந்து ஆரம்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுப்பணித்துறை மற்றும் மருத்துவத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், நோயாளிகளின் வசதிக்காக புதிதாக நிழற்குடைகளை அமைக்கவும், மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு மருத்துவமனை வளாகத்தை பசுமை நிறைந்த வளாகமாக மாற்றிட வேண்டும் என்று மருத்துவர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், மோகன், குன்னம் வட்டாட்சியர் தமிழரசன், கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மரு.அரவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சேசு, லப்பைகுடிகாடு பேரூராட்சியின் செயல் அலுவலர் சின்னசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து