முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கும் அரசுக்கும் அதிகாரிகள் பாலமாக செயல்பட வேண்டும் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, மக்களுக்கும், அரசுக்கும் அதிகாரிகள் பாலமாக இருந்து செயல்பட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

இந்திய அதிகாரிகள் சங்கத்தின் 110 வது ஆண்டு விழா மற்றும் மாநாடு ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.மாநாட்டுக்கு, சங்கத்தின் தலைவர் மூ.ராசாராம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆர்.சுடலைக்கண்ணன், துணைத்தலைவர்கள் எஸ்.எஸ்.ஜவஹர், ஏ.ஆர்.செல்வக்குமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மேலாண்மை நிலையத்தின் தலைவர் கவிதா சித்துரி ஆகியோர் கலந்துகொண்டனர். மாநாட்டில், மெட்ராஸ் மேலாண்மை சங்கத்தின் புதிய கட்டிடத்தை வெங்கய்யா நாயுடு திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசு அதிகாரிகள் அர்த்தசாஸ்த்ர நூலையும், திருக்குறளையும் படிக்க வேண்டும். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பல்வேறு விஷயங்களை நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்துள்ளனர்.இந்தியாவின் வளர்ச்சியில் அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அரசாங்கத்தின் எந்தத் துறையாக இருந்தாலும் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த சட்டங்களை இயற்றினாலும், திட்டங்களை தீட்டினாலும், அவற்றின் முழு பலன்களும் மக்களை சென்றடைவதில் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியம்.

அதிகாரிகள் நேர்மையாகவும், கடமை தவறாமலும் இருக்க வேண்டும். நல்ல அதிகாரிகள் இல்லாமல் மக்களுக்கான திட்டங்கள் இயற்றி பலனில்லை. மக்களுக்கும், அரசுக்கும் அதிகாரிகள் பாலமாக இருந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நல்லாட்சி என்ற பெயருக்கே அர்த்தம் இருக்கும்.

அதிகாரிகள் ஏதோ காலையில் வேலைக்கு வந்தோம், மாலையில் வீட்டுக்கு சென்றோம் என்று இருக்கக் கூடாது. அவர்கள் தங்களுடைய முழுத் திறமையையும் கொண்டு உழைக்க வேண்டும். அரசாங்கம் அதிகாரிகளின் திறமைக்கு மரியாதை கொடுத்து பணியமர்த்த வேண்டும்.

அதேபோல், அதிகாரிகளும் காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் பயன்பெறக் கூடிய புத்தம் புதிய திட்டங்களை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.முக்கியமாக, அரசு அதிகாரிகள் நகரங்களை விட கிராமங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.வ்வொருவருக்கும் தங்களது தாய் மொழி மிக முக்கியமானது. குடும்பத்துக்குள் தாய்மொழியை பேசுங்கள். தமிழர்கள் தெலுங்கு, ஹிந்தி மற்றும் அண்டை மாநில மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள். அதில் தவறில்லை; எந்த மொழியும் தாழ்வானது இல்லை. இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு பேசுகையில், அதிகாரிகள் நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும்.

மத்திய அரசு ‘மேக் இன் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’, ‘தூய்மை இந்தியா’ என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இதை நாடு முழுவதும் அமல்படுத்தியும் உள்ளது. ஆனால் இவையெல்லாம் மக்களிடையே சென்று சேர அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போதுள்ள தொழில்நுட்பங்களை அதிகாரிகள் தெரிந்து வைத்திருந்து, அவற்றை மக்களின் நலனுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து