முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம்

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

தேனி.--தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிகல்வித்துறையின் சார்பில், அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசியர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம்  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்   பேசும்போது தெரிவிக்கையில், தமிழக அரசு ஏழ்மையின் காரணமாக எந்தவொரு மாணவனும் கல்வியை தொடர முடியாத சூழ்நிலையை தவிர்ப்பதற்காகவும், கல்வி சார்ந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஒரு மாணவனுக்குத் தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இதுபோன்ற தமிழக அரசின் கல்வி சார்ந்த திட்டங்களின் பயனாக நமது மாவட்டம் மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2015-16-ஆம் கல்வியாண்டில் 96.5 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதத்திலிருந்து, 2016-17-ஆம் கல்வியாண்டில் 97.1 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதமும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2015-16-ஆம் கல்வியாண்டில் 95.1 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதத்திலிருந்து, 2016-17-ஆம் கல்வியாண்டில் 95.9 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலுகின்ற மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் முக்கிய பணியாகும். மாணவ, மாணவியர்களின் எழுத்துதிறன் தேர்வு, வாசிப்புத்திறன் தேர்வுகள் அவ்வப்போது நடத்தி மாணவ, மாணவியர்களின் திறனை வெளிப்படுத்திட வேண்டும். 
 மாணவ, மாணவியர்களின் படிப்பில் பெற்றோர்களின் பங்கு என்ன என்பதனை தலைமையாசிரியர்கள் உணர்த்திட வேண்டும். பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்களின் திறனை ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பித்திட வேண்டும். மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தினையும், நமது மாவட்டத்தை மாநில அளவில் முதன்மையான மாவட்டமாக கொண்டு வரவேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,இ.ஆ.ப.,   தெரிவித்தார்.
       பயிற்சி முகாமில் மதுரை - இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) முனைவர்.குமார்  , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  தி.வசந்தி  , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்  , மாவட்ட கல்வி அலுவலர்கள்  தி.இராஜேஸ்வரி  ,  செல்வம்  , நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர்  மகேஷ்வரன்  , தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து