முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா கோத்தகிரியில் டிடிவி தினகரன் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தார்

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      நீலகிரி
Image Unavailable

பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 101_வது பிறந்த நாளையொட்டி கோத்தகிரியில் எம்.ஜி.ஆரின் முழு உருவசிலைக்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
                   சிறப்பான வரவேற்பு
தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101_வது பிறந்த நாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் நிறுவப்பட்டுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அ.தி.மு.க(அம்மா) அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ செவ்வாய்கிழமை இரவு ஊட்டி வந்தார். ஊட்டியில் அவருக்கு நகர கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதன்கிழமை காலை ஊட்டியில் இருந்து கார்மூலம் கோத்தகிரி சென்ற தினகரன் அங்கு டானிங்டன் பகுதியில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார்.
முன்னதாக ஊட்டியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது-
                  தி.மு.க.டெபாசிட் காலி
எங்களது அணிக்கு நாள்தோறும் தொண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நமது கட்சி என்ன என்பது பற்றி தெரிவிக்க வேண்டும். அதற்காக முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இன்று கோத்தகிரியில் இரண்டாவது கட்ட ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மாவட்ட கழக செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். எங்களுடைய நோக்கம் புதிய கட்சி ஆரம்பிப்பதல்ல. ஆகையால் வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று அந்த பலத்தின் மூலம் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.ககட்சியையும் கைப்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து பரிசீலித்து வருகிறோம். அதற்கு முன்பாக நீதிமன்றத்திற்கு சென்று அ.இ.அ.தி.மு.க(அம்மா) அணியை கேட்டுப்பெற உள்ளோம்.
தமிழக முதல்வர் அம்மா இறந்த பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக கருதி நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அரசியலுக்கு தனித்தன்மை தேவை. மக்கள் ஓட்டுப்போட்டால் தான் யாருமே வெற்றி பெற முடியும். மக்கள் ஆதரவு உள்ளவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும். ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.கஜெயித்து விடுவோம் என்ற மிதப்பில் இருந்ததால் தான் டெபாசிட் இழப்பிற்கு காரணம். எனவே இரட்டை இலையையும், அ.தி.மு.கவையும் மீட்டெடுக்க ஒரு பக்கம் நீதிமன்றத்திலும், ஒரு பக்கம் மக்கள் மன்றத்திலும் போராடி மீட்டெடுக்க பாடுபடுவோம். எனவே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வரை குக்கர் சின்னம் தொடரும் என்றார்.
பேட்டியின் போது நீலகிரி மாவட்ட கழக செயலாளர் எஸ்.கலைச்செல்வன், கழக அமைப்புச்செயலாளர் தேனாடு லட்சுமணன், முன்னாள் கவுன்சிலர் தம்பி இஸ்மாயில், பொன்மாரி சௌந்தர பாண்டியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து