ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் லட்ச தீப வழிபாடு

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      தூத்துக்குடி

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் நடைபெற்ற லட்ச தீப வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

லட்ச தீப வழிபாடு

நவதிருப்பதிகளில் கடைசி ஸ்தலமாகவும், குரு ஸ்தலமாகவும்  ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்  ஆழ்வார் கோவில் திகழ்ந்து வருகிறது. ஆன்மிக சிறப்புபெற்ற ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தைஅமாவாசை அன்று லட்ச தீப வழிபாடு பக்தர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான லட்சதீப வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.லட்சதீபத்தை முன்னிட்டு மூலவர் சன்னதி முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய விளக்கில் திருக்கோவில் சார்பில் முதலில் விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகம் முழுவதும் அகல்விளக்குகளை வரிசையாகவும், நட்சத்திரம், பெருமாள் திருநாமம் உள்ளிட்ட பல வடிவங்களிலும் ஏற்றி வைத்து வழிபட்டனர். பக்தர்கள் ஏற்றி வைத்த லட்ச தீபத்தால் கோவில் தீபஒளியில் ஜொலிஜொலித்தது. லட்ச தீப விழாவை  முன்னிட்டு சுவாமி ஸ்ரீபொலிந்துநின்ற பிரான் திருக்கோவில் வளாகத்திற்குள் வலம் வந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், அதிமுக நகர செயலாளர் செந்தில்ராஜ்குமார், முன்னாள் டவுண் பஞ்சாயத்து தலைவர் ஆதிநாதன், முன்னாள் அறங்காவலர் ராஜப்பா உட்பட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து