விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில்  நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்

இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்ததாவது:வருகின்ற 26.01.2018 அன்று (குடியரசு தினவிழா) கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட உள்ளது.  சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட உள்ளனர்.அனைத்துத் துறைகளிலும் அன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.  மேலும், அன்றைய தினம் அனைத்துத்துறை அலுவலகங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  கல்வித்துறையின் மூலம் சிறப்பான கலைநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.குடியரசு தின கொடியேற்று விழா, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பொதுமக்கள் கண்டுகளிப்பதற்கு வசதியாக மைதானத்தைச் சுற்றி சாமியானப்பந்தல் மற்றும் நாற்காலிகள் அமைக்க வேண்டும்.  குடியரசு தினவிழாவை பொதுமக்கள் காண மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.  சுகாதாரத்துறையின் மூலம் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை போன்றவை ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) இராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சரஸ்வதி, மல்லிகா, அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து