சென்னையில் 3 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      சென்னை

கொலை மற்றும்கொள்ளையில் ஈடுபட்டு வந்து போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகளான 3பேரை துப்பாக்கி முனையில் சென்னை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.இந்த சம்பவம் எம்எம்டிஏ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் விழா

இந்தசம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- அரும்பாக்கத்தை சேர்ந்தவர் உமர் பாஷா (வயது 27), இவரது நண்பர்கள் நெமிலியைச்சேர்ந்த சரவணன் (வயது 27), சூளைமேட்டைச்சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 26). இவர்கள் மூவரையும் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக சூளைமேடு இன்ஸ்பெக்டர் இராயப்பன் ஏசுநேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். போலீஸ் தேடப்படுவதை கண்டு இவர்கள் திருப்பதிக்கு சென்று அங்கு மறைந்து வாழ்ந்து வருவதாகவும் மாதத்திற்கு ஒருமுறை சூளைமேடு , அரும்பாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வந்து மாமூல் வசூல்செய்து கொண்டு செல்வதாக வும் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் பொங்கல் விழாவை தொடர்ந்து அவர்கள் அரும்பாக்கம் பகுதிக்கு மாமூல் வசூல் செய்ய வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த தகவலின் படி கடந்த 16ம்தேதி தனிப்படை போலீசார் எஸ்ஐ ராமகிருஷ்ணன், பெண் இன்ஸ்பெக்டர் ஜான்சி தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் எம்எம்டிஏ காலணி பகுதியில் நின்று ரவுடிகள் கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு காரில் இருந்து உமர் பாஷா மற்றும் நண்பர்களுடன் மூன்று பேர் இறங்கிவந்து மாமூல் வசூலில் ஈடுபட்டனர். அவர்களை பார்த்தவுடன் மாறுவேடத்தில் நின்றிருந்த போலீசார் உமர் பாஷா வந்த காரை சுற்றி வளைத்தனர். இதைபார்த்தவுடன் அந்த மூன்றுபேரும் துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றனர்.ஆனால் அவர்கள் சமயோஜிதமாக போலீசார் துப்பாக்கி முனையில் பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், போலீஸ் எங்களை தேடுவதை அறிந்து நாங்கள் திருப்பதியில் பதுங்கியுள்ளோம்.கையில் காசு இல்லாத போது சென்னை வந்து அரும்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் உள்ள கடைகளில மாமூல் வசூல் செய்து கொண்டு திரும்பவும் திருப்பதிக்கு சென்று விடுவோம் என்று கூறினர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடியான உமர் பாஷா மற்றும் நண்பர்கள் மீது பல காவல் நிலையங்களில் 3 கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளி உமர் என்பதும் தெரியவந்தது.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து